வெப்ப அலையால் உருகிய லட்டு- வைரலான பதிவு

பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வெப்ப அலையால் உருகிய லட்டு- வைரலான பதிவு
Published on

நாட்டின் பல நகரங்களிலும் வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவில் வீசும் வெப்ப அலையை தாக்கு பிடிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஓமியோபதி மருத்துவரான பூமிகா என்பவர் எக்ஸ் தளத்தில் ஒரு இனிப்பு பெட்டியின் படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் அவரது பதிவில், முதலில் பெட்டி முழுவதும் லட்டுகள் இருந்தது. ஆனால் டெல்லி வெப்பத்தில் அது உருகி அல்வாவாக மாறி விட்டது என குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com