குடும்பத்துக்காக இந்திய விமானப்படை பதவியைத் துறந்த பெண் அதிகாரி: குவியும் பாராட்டு

புல்தெய் என்பது உத்தரகான்டின் புகழ்பெற்ற வசந்த கால மலர் திருவிழாவை குறிக்கும்.
iswarya
Published on: 
Summary

இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஒருவர், தனது ராணுவப் பணியை விடுத்து குடும்பத்துக்காக சொந்த ஊரில் துணிக்கடை தொடங்கியது சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.

உத்தரகான்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா சந்தோலா. இந்திய ராணுவத்தின் விமானப்படையில் கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

பதவியைத் துறந்த அதிகாரி

இந்நிலையில், ஐஸ்வர்யா தற்காலிகமாக தனது விமானப்படை பணியிலிருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பாக, ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில் கூறியுள்ளதாவது:

என் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என நான் உணர்ந்தேன். என் பெற்றோருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு என் உதவி தேவைப்பட்டது.

வாழ்க்கையின் வேகத்தை சற்று குறைத்துக்கொண்டு, நான் நேசிக்கும் மனிதர்களுக்காக நேரம் ஒதுக்க விரும்பினேன்.

அதனால், நான் புதிதாக ஏதாவது ஒன்றை உருவாக்கப் போகிறேன் என்றால், அதை ஏன் இங்கேயே தொடங்கக்கூடாது? என யோசித்தேன்.

எனக்குள் எப்போதும் ஒரு படைப்பாற்றல் மிக்க பக்கம் இருந்தது. ஆடைத்துறையைத் தேர்ந்தெடுப்பது எனக்கு இயல்பாகப் பொருந்தியது. அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் கையாள்வது எளிதாக இருக்கும் என கருதுகிறேன்.

தன் குழந்தைகளுடன் இருக்க விரும்பும், வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்து நிதானமாக வாழ விரும்பும் ஒரு சாதாரண அம்மாதான் நான் என பதிவிட்டுள்ளார்.

சொந்த ஊரில் புதிய தொடக்கம்

விமானப்படையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, தனது சொந்த மாநிலமான உத்தரகண்டின் டேராடூன் நகருக்கு திரும்பிய ஐஸ்வர்யா, அங்கு 'புல்தெய்' என்ற பெயரில் பிரத்யேக பாரம்பரிய துணிக்கடை மற்றும் ஸ்டுடியோவை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.

'புல்தெய்' என்பது உத்தரகான்டின் புகழ்பெற்ற வசந்த கால மலர் திருவிழாவை குறிக்கும். அதன் நினைவாக, வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக அவர் தனது கடைக்கு இப்பெயரை சூட்டியுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்

அவர் பகிர்ந்த இந்த உருக்கமான மற்றும் ஊக்கமளிக்கும் காணொளி, லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

குடும்பத்திற்காக, எளிய வாழ்க்கைக்காக அவர் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவைப் பாராட்டி, சமூக வலைதளங்களில் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com