திடீரென தீப்பிடித்த பேருந்து: நடக்க முடியாத அம்மா, காப்பாற்ற போராடிய மகன்- 9 பேர் உயிரிழந்த விபத்தில் உருக்கமான தகவல்..!

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
திடீரென தீப்பிடித்த பேருந்து: நடக்க முடியாத அம்மா, காப்பாற்ற போராடிய மகன்- 9 பேர் உயிரிழந்த விபத்தில் உருக்கமான தகவல்..!
Published on: 

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே-யில் சுற்றுலா பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென புகை வந்துள்ளது. இதனால் பேருந்தில் இருந்து புகை வருவதாக பேருந்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், டிரைவரும், உதவியாளரும் பேருந்து இருந்து புகை வராது. வெளியில் இருந்து வருவதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். மீண்டும் பயணிகள் புகை வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், டிரைவர் அவர்களின் எச்சரிக்கையை நிராகரித்துள்ளது.

9 பேர் பலி

திடீரென பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர். இருந்தபோதிலும் 9 பயணிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் சர்காரி டவுன் ராஜ்மந்திரி பகுதியை சேர்ந்த பாஜக மாவட்ட பொருளாளர் நீரஜ் சோப்ராவின் மனைவியும், மகனும் அடங்குவார்கள். இந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயும் மகனும் தீயில் கருகினர்

ஏனென்றால், சுனிதா என்ற பாஜக தலைவரின் மனைவியால் நடக்க முடியாதாம். இதனால் மகன் உதவியுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். சுனிதா கடைசி இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரால் உடனடியாக பேருந்தில் இருந்த வெளியேற முடியவில்லை. தனது தாய்க்கு, ஷஷாங்க் என்ற அவரது மகன் உதவி செய்ய முயற்சி செய்துள்ளார்.

குறுகிய நேரத்திற்குள் தனது அம்மாவை வெளியே தூக்கிக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக தனது தாயார் உடன், இளைஞரான அவரது மகனும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பயணிகள் எச்சரித்தும் டிரைவர் அலட்சியமாக இருந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் உள்ள ஏ.சி. வெடித்து, அதன்மூலம் தீ பரவியாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com