என் மலர்tooltip icon

    இந்தியா

    வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய பெண்.. வலையில் விழுந்த முதியவரிடம் ரூ.14 லட்சம் அபேஸ்
    X

    வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய பெண்.. வலையில் விழுந்த முதியவரிடம் ரூ.14 லட்சம் அபேஸ்

    • குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் தொடங்கியது.
    • விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியாக தைரியத்தை வரவழைத்து போலீசிடம் புகார் அளித்தார்.

    மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவரிடம் நூதன முறையில் ஆன்லைனில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்திரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த அந்த முதியவர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி காலை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் தொடங்கியது.

    அப்போது அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்தவுடன், ஒரு இளம் பெண் நிர்வாண நிலையில் அவர் முன் தோன்றினார். அந்த நேரத்தில் அந்த முதியவரும் அரை நிர்வாண நிலையில் இருந்தார். அந்தப் பெண் அந்த வீடியோ அழைப்பைப் பதிவு செய்தார்.

    சிறிது நேரம் கழித்து அந்த முதியவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது, இந்த முறை அழைத்தவரின் பெயர் ஹேமந்த் மல்ஹோத்ரா.

    அவர் அந்த முதியவரிடம் அவரது ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டதாகக் கூறினார். இதன் பிறகு அழைத்த பிரமோத் ரத்தோட் என்ற மற்றொரு நபர், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு, முதியவருக்கு அடிக்கடி போன் செய்து, சமரசத்திற்கு உடன்படவில்லை என்றால், சிறையில் அடைப்பேன் என்று மிரட்டினார்.

    முதியவரை தொடர்ந்து மிரட்டி, கொஞ்சம் கொஞ்சமாக இந்த கும்பல் ரூ.14 லட்சத்து 66 ஆயிரம் பணம் கரைந்துள்ளது. இந்த முழு சம்பவமும் மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரை நடந்தது.

    பணத்தை கொடுத்த பிறகும் மிரட்டல் நின்றபாடில்லை. அவர்கள் மேலும் பணம் கேட்கத் தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியாக தைரியத்தை வரவழைத்து போலீசிடம் புகார் அளித்தார்.

    வழக்குப்பதிவு செய்த போலீசார், மோனி பாட்டீல், ஹேமந்த் மல்ஹோத்ரா, பிரமோத் ரத்தோட், அரவிந்த் சிங் மற்றும் அடையாள தெரியாத 2 நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதுபோல பல பேரிடம் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    Next Story
    ×