டீச்சர் SHOCKED.. ஸ்டூடண்ட் ROCKED.. மொபைல் போன்களின் பயன்கள் குறித்து மாணவன் எழுதிய அல்டிமேட் விளக்கம்

இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.செல் போன்களின் பயன்கள் என்ன? என்பது கேள்வி
டீச்சர் SHOCKED.. ஸ்டூடண்ட் ROCKED.. மொபைல் போன்களின் பயன்கள் குறித்து மாணவன் எழுதிய அல்டிமேட் விளக்கம்
Published on: 

மனிதர்கள் மீது ஏகபோகமாக ஆதிக்கம் செய்யும் மொபைல் போன்கள் உணவு நீருக்கு அடுத்தபடியாக அத்தியாவசிய தேவையாகவே மாறியுள்ளது. அத்தகு மொபைல் போன்களின் பயன்கள் குறித்து பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் அளித்துள்ள விளக்கம் இணையதில் வைரலாகி வருகிறது. இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.

கேள்வி:

செல் போன்களின் பயன்கள் என்ன?

பதில்:

போன் இல்லையென்றால் மனநிலை [MOOD] நன்றாக இருக்காது, MOOD இல்லையென்றால் படிக்கத் தோன்றாது, படிக்காமல் வேலை கிடைக்காது, வேலை இல்லையென்றால் பணம் இருக்காது, பணம் இல்லையென்றால் சாப்பாடு கிடையாது, சாப்பிடாமல் உடல் எடை குறையும், அதனால் உருவத்தில் மாற்றம் ஏற்படும். உருவம் நன்றாக இல்லையென்றால் யாரும் காதலிக்க மாட்டார்கள், யாரும் விரும்பவில்லையென்றால் கல்யாணம் நடக்காது, கல்யாணம் நடக்கவில்லை என்றால் தனிமையாக உணர்வோம், தனிமையாக இருப்பதால் கவலை ஏற்படும், கவலை மன அழுத்தமாக மாறும், மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதித்து இறுதியும் மரணம் ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com