பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா? - மம்தா பானர்ஜி

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது - மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது
பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா? - மம்தா பானர்ஜி
Published on

அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல் துணைக் கண்காணிப்பாளரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பாஜக விரும்புகிறது.

நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com