மேற்கு வங்கம்: காட்டு யானைகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க வாகனங்களை நிறுத்திய வனத்துறை!

மனிதன்-விலங்கு இணக்கமான வாழ்விற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - வனத்துறை அமைச்சர் பூபேந்தர்
Elephant Crossing
Published on: 
Summary

மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா பகுதியில் உள்ள ஒரு பிஸியான நெடுஞ்சாலையில், காட்டு யானைகள் கூட்டம் ஒன்று பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர்.

யானைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகச் சாலையைக் கடக்கும் வரை வாகன ஓட்டிகள் பொறுமையுடன் காத்திருந்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, நெட்டிசன்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

யானைகளுக்கு பாதை

குர்சியோங் வனப்பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் போக்குவரத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டு இந்த நெகிழ்ச்சியான காரியத்தைச் செய்துள்ளனர்.

"மனிதன்-விலங்கு இணக்கமான வாழ்விற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு"

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த வீடியோவைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து வனத்துறையினரைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பாராட்டிய வனத்துறை அமைச்சர்

அவர் தனது பதிவில், "இணக்கமான வாழ்வின் காட்சி இது. மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் யானைகள் பாதுகாப்பாகச் செல்வதற்காக வனத்துறையின் கடைநிலை ஊழியர்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். மனிதர்களையும் வனவிலங்குகளையும் நாம் ஒன்றாகப் பாதுகாப்பது இப்படித்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் சாலைகள் அமையும் போது, வாகன ஓட்டிகள் பொறுமையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியிருப்பதாக சமூக வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விலங்குகளுக்காக பிரத்யேக 'மேம்பாலங்கள்' கட்டப்பட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.'

ரெயிலை நிறுத்திய 'ரியல் ஹீரோ'

ரெயிலை நிறுத்தி யானைகளைக் காப்பாற்றிய மற்றொரு 'ரியல் ஹீரோ'

இதேபோல் வனப்பகுதியில் யானைகளைக் காப்பாற்றிய மற்றொரு த்ரில்லிங் வீடியோவையும் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.

பாக்டோக்ரா - நக்சல்பாரி இரயில் பாதையில் 'சிக்கிம் மகாநந்தா' ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்த போது, யானைகள் கூட்டம் ஒன்று தண்டவாளத்தைக் கடந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த ஆகாஷ் கெர்கெட்டா என்ற வனக்காவலர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சிவப்புத் துணியை அசைத்து ரெயில் ஓட்டுநரை எச்சரித்துள்ளார்.

விபத்து தவிர்க்கப்பட்டது

வனக்காவலரின் சமயோசித புத்தியாலும், ரெயில் பைலட்டுகளின் விரைவான நடவடிக்கையாலும் ரெயில் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு, ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு யானைகள் கூட்டம் காப்பாற்றப்பட்டது.

வனப்பகுதிகளில் மனிதர்களின் தலையீட்டால் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுத்து, அவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இந்த இரு சம்பவங்களும் மிகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com