கல்கி 2898 ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்குள் திடீர் மழை... ரசிகர்கள் அதிர்ச்சி- வீடியோ

நிர்வாகிகள் படத்தை தொடர்ந்து பார்க்க விருப்பம் இல்லை என்றால் தயவு செய்து வெளியேறுங்கள் என கூறினர்.ரசிகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்கி 2898 ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்குள் திடீர் மழை... ரசிகர்கள் அதிர்ச்சி- வீடியோ
Published on

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பஞ்சா குட்டாவில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் 'கல்கி 2898' சினிமா திரையிடப்பட்டுள்ளது. நேற்று தியேட்டரில் ஏராளமான ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டையின் காரணமாக தியேட்டருக்குள் அருவி போல மழை பெய்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆவேசமாக கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

சினிமா தியேட்டரில் தண்ணீர் கசிவு மூலம் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். நிர்வாகிகள் படத்தை தொடர்ந்து பார்க்க விருப்பம் இல்லை என்றால் தயவு செய்து வெளியேறுங்கள் என கூறினர்.

இதனால் ரசிகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com