இந்தியாவில் மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய் மட்டும்தானா?

6 கி.மீ. மாரத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய் 3 கி.மீ. ஓடினார்.
இந்தியாவில் மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய் மட்டும்தானா?
Published on

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு ஓடினார்.

அவருடன் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஓடினர். இந்த மாரத்தானைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே 3 கி.மீ. மாராத்தானில் ஓடிய ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தான் எனப் பேசினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது உண்மையா? எனப் பார்ப்போம்.

கடந்த 2024ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற முதல் சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டியில், அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்தியா மற்றும் 12 வெளிநாடுகளைச் சேரந்த தடகள வீரர்களுடன் இணைந்து ஓடினார். அந்த மாரத்தானில் 54 வயதில், 21 கிலோமீட்டர் (அரை மாரத்தான்) தூரத்தை கிட்டத்தட்ட 1 மணி நேரம் 50 நிமிடங்களில் ஓடி முடித்தார்.

அதனைத்தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற மாராத்தானிலும் கலந்துகொண்டு 21.1 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com