டுவிட்டரில் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஸ்வநாதன் ஆனந்த்

ஒரு பயனர், ‘என் நண்பன் எப்போதும் என் ராணியை எடுத்து செல்கிறான்’ என்ன செய்வது? என்று கேட்டிருந்தார். ஆனந்த் வேடிக்கையாக செஸ் விளையாட்டிலா? அல்லது வாழ்க்கையிலா? என கேட்டு பதில் அளித்தார்.
டுவிட்டரில் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஸ்வநாதன் ஆனந்த்
Published on

செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு இருந்தாலும் அவர் அதிக பதிவுகளை பதிவிடுவது இல்லை. இந்நிலையில் அவர் #AskVishy என்ற ஹேஷ்டேக்குடன் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அமர்வை தொடங்கி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் செஸ்போர்டுக்கு முன்னால் இருப்பது போன்று ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார். பின்னர் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கினார். அப்போது ஒரு பயனர், 'என் நண்பன் எப்போதும் என் ராணியை எடுத்து செல்கிறான்' என்ன செய்வது? என்று கேட்டிருந்தார். அதற்கு ஆனந்த் வேடிக்கையாக செஸ் விளையாட்டிலா? அல்லது வாழ்க்கையிலா? என கேட்டு பதில் அளித்தார். இதேபோல ஆனந்திடம், உங்களுக்கு பிடித்த பாடல் எது? என பயனர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர் 'ரூக் ரூக் ரூக் ஹரே பாபா ரூக்' என பதில் அளித்திருந்தார். இதே போல பல்வேறு பயனர்களுக்கும் அவர் பதிலளித்து பயனர்களை குஷிபடுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com