

கிராம மக்களுக்கும் வெங்கட்டம்மா சூனியம் செய்து விடுவார் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வெங்கட்டம்மாவை பிடித்து வந்து மரத்தில் கட்டி வைத்து சரமரியாக தாக்கினர். தடுக்க முயன்ற அவரது கணவரையும் அடித்து உதைத்தனர். பின்னர் கிராம மக்கள் தப்பி சென்றனர்.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் மஞ்சாலா அடுத்த நோமுலாவை சேர்ந்தவர் வெங்கட்டம்மா (வயது 60). இவர் கிராமத்தின் புறநகர் பகுதியில் சிறியதாக கோவில் கட்டி இவரை நாடி வருபவர்களுக்கு குறி சொல்லி வந்தார்.
மேலும் மாந்திரீகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கிராம மக்களுக்கும் வெங்கட்டம்மா சூனியம் செய்து விடுவார் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வெங்கட்டம்மாவை பிடித்து வந்து மரத்தில் கட்டி வைத்து சரமரியாக தாக்கினர். தடுக்க முயன்ற அவரது கணவரையும் அடித்து உதைத்தனர். பின்னர் கிராம மக்கள் தப்பி சென்றனர்.
வெங்கட்டம்மாவின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து மஞ்சாலா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 14 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.