நடிகரை வியக்க வைத்த பெண்ணின் ரீல்ஸ் நடன வீடியோ வைரல்

தௌபா... தௌபா... ரீல்ஸ் வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.வீடியோவை பார்த்த நடிகர் விக்கி கவுஷல் அந்த பெண்ணின் நடனத்தை வியந்து பாராட்டினார்.
நடிகரை வியக்க வைத்த பெண்ணின் ரீல்ஸ் நடன வீடியோ வைரல்
Published on

சமீபத்தில் வெளியான 'பேட்நியூஸ்' படத்தில் இடம் பெற்ற தௌபா... தௌபா... பாடல் இணையத்தில் வைரலானது. பஞ்சாபி பாடகர் கரண் அவுஜ்லா இசையமைத்து எழுதிய இந்த பாடலுக்கு விக்கி கவுஷல், கரண் மற்றும் ட்ரிப்தி டிம்ரி ஆகியோர் அசத்தலாக நடனமாடி இருந்தனர். இந்த பாடல் ஹிட் ஆன நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பினரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் இணையத்தில் தௌபா... தௌபா... ரீல்ஸ் வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரூபாலிசிங் என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளபா... தௌபா பாடலுக்கு ஒரு பெண் நடனமாடும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மஞ்சள் நிற சேலை அணிந்து ஒரு பெண் சிறிய ஓட்டு வீட்டின் முன்பு நின்று குழந்தைகளுடன் சேர்ந்து அசத்தலாக நடனமாடுகிறார்.

அவரின் இந்த நடனம் பயனர்களை ரசிக்க செய்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் விக்கி கவுஷல் அந்த பெண்ணின் நடனத்தை வியந்து பாராட்டினார். பயனர்களும் அந்த பெண்ணின் நடனத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com