உத்தரகாண்ட் சாலை விபத்து - மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

பேருந்து பாலத்திலிருந்து சுமார் 100 மீட்டர் கீழே ஓடையில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்..
உத்தரகாண்ட்   சாலை விபத்து - மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்
Published on: 

உத்தராகண்ட் மாநிலத்தின் டெஹ்ரி கர்வால் மற்றும் பன்ஸ்வாரா–மோகன்கால் பகுதிகளில் நிகழ்ந்த கோரச் சாலை விபத்தில் பலர் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்துள்ளார்.

கோர விபத்து

உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில், குலார் அருகே இன்று காலை பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து சுமார் 100 மீட்டர் கீழே ஓடையில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.

விஸ்வநாத் சேவா நிறுவனத்தால் இயக்கப்படும் அந்தப் பேருந்து, ஹரித்வாரிலிருந்து கர்ணபிரயாகத்திற்கு 34 பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த கோர விபத்தானது ஏற்ப்பட்டுள்ளது.

இரங்கல் செய்தி குறித்து தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

உத்தராகண்டின் டெஹ்ரி கர்வால் மற்றும் பன்ஸ்வாரா-மோஹன்கால் ஆகிய இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

மாநில அரசு உடனடியாக உதவிகளை வழங்க வேண்டும்; மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

X