

உத்தரகாண்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர செயல்முறைக்கு பிறகு, இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 8 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து உத்தரகாண்ட் தலைமை தேர்தல் அலுவலகம் ஜூன் 8 அன்று சிறப்பு வாக்காளர் கணக்கெடுப்பை தொடங்கி நடத்தி வருகிறது.
இந்த பணி தொடங்குவதற்கு முன்பு வாக்காளர் பட்டியலில் 79.6 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.
இதையடுத்து கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பின்னர் ஜூலை 14 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் சுமார் 71.33 லட்சம் வாக்காளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையில் தேர்தல் ஆணையம், வாக்களர்கள் தங்கள் கோரிக்கைகளையும் ஆட்சேபனைகளையும் தாக்கல் செய்வதற்கு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை அவகாசம் வழங்கியது.
இதில் பெறப்பட்ட படிவங்கள் பரிசீலிக்கப்பட்டதை தொடர்ந்து, 71.58 லட்சம் வாக்காளர்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 3 என்று வெளியிடப்பட்டது.
சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் தொடங்கியபோது இருந்த வாக்காளர் பட்டியலை விட, இறுதி பட்டியலில் 8.01 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.
மேலும் இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 3,737,701 ஆண் வாக்களர்களும், 3,421,036 பெண் வாக்காளர்களும், 212 மூன்றாம் பாலினதவர்களும் உள்ளனர்.
வாக்காளர்களும் உள்ளனர். இதில் 18-19 வயதுக்குட்பட்ட 72,656 வாக்காளர்களும், 80 வயதுக்கு மேற்பட்ட 1,22,892 வாக்காளர்களும் அடங்குவர்.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் செயல்முறையின் போது, தகுதியுள்ள 1,29,872 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர், அதே நேரத்தில் 1,04,708 பெயர்கள் நீக்கப்பட்டன.
இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்கள், ECI-Net செயலி மூலம் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து இணையவழியாகவோ அல்லது தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலமாக நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.
இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், தகவல்களை சேகரிப்பதற்காக வீடு வீடாக சென்று பார்வையிடுமாறு தேர்தல் அலுவலர்களுக்கு (BLOs) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்கள், தற்போதைய வாக்காளர் பட்டியலை, சிறப்பு வருமான அறிக்கை (SIR)-க்கு முந்தைய பட்டியலுடன் ஒப்பிட்டு, முந்தைய பட்டியலில் இடம்பெற்று தற்போதைய பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்களைக் கண்டறிவார்கள்.
அவர்கள் அத்தகைய வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய நிலையை உறுதிசெய்து, தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால், வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்கான படிவம் 6-ஐப் பூர்த்தி செய்ய உதவுவார்கள்.
மேலும், முதல் முறை வாக்களிப்பவர்களுக்கும், விடுபட்டுப் போன தகுதியுள்ள மற்ற இளம் வாக்காளர்களுக்கும் அவர்கள் உதவுவார்கள்.
அத்தகைய வாக்காளர்களின் பட்டியல், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பகிரப்படும்.
இதன் மூலம், தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் ராவத், தொகுதி மறுசீரமைப்பு செயல்முறைக்கு முன்பு வாக்காளர்களின் எண்ணிக்கை 85.19 லட்சமாக இருந்ததாகவும், தற்போது அது 71.58 லட்சமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.