சாதி வார்த்தைகளை பயன்படுத்துவது SC/ST சட்டத்தின் கீழ் குற்றமாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்

சாதி வார்த்தைகள் மட்டும் குற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
SC/ST Act - Allahabad High Court
Published on

சாதிய வசை சொற்களை பயன்படுத்துவது மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் (SC/ST Act) கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவரை அவமதிக்கும் நோக்கத்திற்காக அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமன்றி, ஒருவரை அவரது சாதியை குறிப்பிட்டு அழைப்பது மட்டும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்

அலாகாபாத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழான ஒரு வழக்கு பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட நபரை குறிப்பிடுவதற்கு ‘சாமர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அவர்கள் தன்னை திட்டியதாகவும், சாமர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.

நீதிபதி அமர்வு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாமர் என்ற வார்த்தையை வெறுமனே பயன்படுத்தியதன் அடிப்படையில் மட்டுமே, மேல்முறையீட்டாளர்கள், பாதிக்கப்பட்டவரை பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவமதிக்கும் நோக்கத்தில், அந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள் என்று அர்த்தமாகாது,” என்று கூறினர்.

மேலும், துஷ்பிரயோகம் மற்றும் குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை, மனுதாரர்கள் இருவருக்கும் குறிப்பிட்ட பங்கு என எதுவும் கூறப்படவில்லை.

பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுகள் வெக்ரஜ் என்பவரின் மகனான மற்றொரு குற்றவாளியான ஹிம்மத் சிங்கு மீது ஏற்கனவே உள்ளன.

எனவே, பதிவில் உள்ள ஆதாரங்கள் தற்போதைய மேல்முறையீட்டாளர்களான வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட போதுமான பங்கையும் வெளிப்படுத்தவில்லை,” என்று நீதிமன்றம் கூறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com