UPI சேவைகள் செயலிழப்பு: வாடிக்கையாளர்கள் புகார்

நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன. UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
UPI சேவைகள் செயலிழப்பு: வாடிக்கையாளர்கள் புகார்
Published on: 

இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.

இந்நிலையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் பணப் பரிவர்த்தனைக்கான UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்த முடியாததால் UPI Down என பயனர்கள் பலரும் தங்களது சமூகவலைத் தளங்களில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com