

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு தயால் என்ற ஷமி. இவர் பேஸ்புக் சமூக வலைளத்தளத்தில் போலி அக்கவுண்ட் ஒன்று உருவாக்கியுள்ளார். அதில் தன்னை பெண் டாக்டர் என்று முன்னிலைப்படுத்திக் கொண்டார். இந்த அக்கவுண்ட் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அந்த பெண்ணிடம் நீங்கள் அதிக எடையுடன் உள்ளீர்கள். நாங்கள் உங்கள் எடையை குறைத்து, கட்டுக்கோப்பான உடலாக உருவாக்குகிறேன். இதற்கு குறைந்த ஆடைகள் அணிந்த போட்டோக்களை அனுப்புங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் சற்று தயங்கியுள்ளார். ஆனால், நான் ஒரு பெண், மேலும் டாக்டர். டாக்டர் முன் உடலை காட்ட ஏன் வெட்கப்படனும்? என பேசியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அறைகுறை ஆடைகளுடன் கூடிய தன்னுடைய போட்டோக்களை அவருக்கு அனுப்பியுளு்ளார்.
போட்டோவை பெற்றுக்கொண்ட ஷமி, அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன். உன் மகனை கொண்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் ஷமி சொல்வதையெல்லாம் கேட்டுள்ளார். இதை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் 5.20 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் பெண் டாக்டர் எனக் கூறி ஏமாற்றிய ஷமியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஷேமியிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் பெண்ணை மிரட்டி பறித்த பணம் மூலம் வாங்கிய பைக், இன்வெர்ட்டர், ஏசி, டி.வி. ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஷமியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.