

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சந்திரசேகர் ஆசாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆளும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும் களத்தில் உள்ள நிலையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் சாத் சமாஜ் (கான்ஷிராம்) கட்சியும் இணைந்து மூன்றாவது கூட்டணியை அறிவித்துள்ளன.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதும், தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட, விளிம்புநிலை மக்களின் குரலாக இக்கூட்டணி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜகவை வீழ்த்த விரும்பினால் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்று சந்திரசேகர் ஆசாத் அழைப்பு விடுத்துள்ளார்.