போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை மின்சார கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கலாம்: உச்சநீதிமன்றம்

மின்சார கட்டணத்தை கட்டியாக வேண்டும். இல்லையெனில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on: 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இ-சலான் மூலம் வழங்கப்பட்டாலும், அது குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக அபராத கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஜே.பி. பரித்வாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை

அப்போது நீதிபதி ஜே.பி. பரித்வாலா "போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக குறைந்த அளவிலேயே இ-சலான் வழக்கப்படுகிறது. வழங்கப்படும் இ-சலான் போதுமானது அல்ல. போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக விதிக்கப்பட்ட அபாரதத் தொகையை திரும்பப் பெறாமல் இருப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராத தொகையை மக்கள் கட்ட தவறினால், அரசுக்கு பல்வேறு வழிகளில் செலுத்தப்படும் கட்டணங்கள், அதாவது மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் கட்டப்படும்போது அதோடு இதை சேர்த்து வசூலிக்கும் வழிகளை ஆராய வேண்டும்.

மின்சார கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க வேண்டும்

மக்கள் அபராதத் தொகையை கட்டவில்லை என்றால், அதை மின்சார கட்டணத்துடன் இணைத்துவிட வேண்டும். மின்சார கட்டணத்தை கட்டியாக வேண்டும். இல்லையெனில் மின்சாரம் துண்டிக்கப்படும். இதற்கான வழியைச் செயல்படுத்திப் பாருங்கள். இந்த நாட்டில், இதற்கான ஒரு தீர்வைக் கண்டறிந்துதான் ஆக வேண்டும்" என்றார்.

டெல்லியில் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலேயே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com