பெங்களூரு உணவகத்தில் தோசை சுட்டு, காபி பரிமாறிய மத்​திய மந்திரி

scindia
Published on
Summary

பில்​டர் காபி போட்டு நுரை பொங்க வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​கி​னார் மத்திய மந்திரி.

பெங்களூரு​வில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்​துக்குச் சென்ற மத்​திய தகவல் தொடர்​புத்​துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தோசை சுட்ட வீடியோ இணை​யத்​தில் வைரலாகி​யது.

மத்​திய தகவல் தொடர்​புத்​துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா நேற்று பெங்​களூரு வந்தார். இவர் அங்குள்ள ராமேஸ்​வரம் கபே உணவகத்​துக்குச் சென்​றார்.

தோசை சுட்ட மந்திரி

அதன் சமையலறைக்குச் சென்ற சிந்தியா வாடிக்​கை​யாளர்​கள், சமையல்​காரர்​ள் முன்னிலையில் மாவை ஊற்​றி, சுடச்​சுட தோசை சுட்​டார். அதன்பின், அவரே அந்த தோசையை வாடிக்​கை​யாளர்​களுக்கு பரி​மாறி​னார். அதைத் தொடர்ந்து பில்​டர் காபி போட்டு நுரை பொங்க வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​கி​னார்.

இதுதொடர்​பான வீடியோவை தனது இன்​ஸ்​டாகி​ராமில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பகிர்ந்துள்ளார். அதில், பெங்களூரு வந்​தால் ராமேஸ்​வரம் கபே வராமல் இருக்க மாட்டேன். அங்கு சென்று தோசை சுட்​டேன். வெளி​யில் இருந்து பார்ப்​ப​தற்கு தோசை சுடு​வது எளி​தாகத் தோன்​றலாம். ஆனால் அதன் பின்​னணி​யில் கடின உழைப்பு உள்​ளது என பதிவிட்டுள்ளார்.

வைரலான வீடியோ

மத்​திய மந்திரி தோசை சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

X

Maalai Malar
www.maalaimalar.com