தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறாத நிலையில், தற்போது மீண்டும் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Published on: 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நவ.30ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் முறைப்படி கலைக்கப்படாமல் ஆகஸ்ட் 13 அன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நவ.30 முதல் டிச.3 வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் மீண்டும் கூட்ட சபாநாயகர்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நவம்பர் 30 அன்று மக்களவையையும், டிசம்பர் 2 அன்று மாநிலங்களவையையும் கூட்ட வேண்டும் என்றும், இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள பணிகளைப் பொறுத்து, டிசம்பர் 3-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையலாம் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை மீண்டும் அறிமுகம் செய்ய இந்த சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறாத நிலையில், தற்போது மீண்டும் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே விகிதத்தில் 50 சதவீதம் அதிகரிக்க இந்த முன்மொழிவு வழிவகை செய்கிறது.

இந்த தொகுதிகளின் எண்ணிக்கை 2051 வரை மாற்றமின்றி தொடரும். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கத்துடன் இந்த மறுவரையறை முன்மொழிவு இணைக்கப்பட்டுள்ளது.

X