சவுதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்

இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களே காரணம் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியது.
riyadh airport
Published on: 
Summary

சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது நேற்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் பலியாகினர். அத்துடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களே காரணம் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குலுக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா கண்டனம்

இதுதொடர்பாக, மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த சில நாட்களாக ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை, குறிப்பாக அக்டோபர் 10-ம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தத் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளையும், காயங்களையும், சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com