

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கேயிடம் செல்போன் மூலம் பேசியுள்ளார்.
சிவசேனா (UBT) கட்சியைச் சேர்ந்த சந்திரகாத் கைரே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைவர் அபிஜீத் தீப்கே வீட்டிற்கு சென்றார். அவரது செல்போன் மூலம் உத்தவ் தாக்கரே தொடர்பு கொண்டார். அதன்மூலம் அபிஜீத் தீப்கே-யிடம் உத்தவ் தாக்கரே பேசினார்.
அப்போது எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார். அதற்கு, மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் அவரை அவர்களுக்கான போராடுவேன் என்று அபிஜீத் தீப்கே பதில் தெரிவித்துள்ளார்.
பின்னர் உத்தவ் தாக்கரே அபிஜீத் தீப்கே தாயாரிடம் பேசியுள்ளார். அப்போது, அபிஜீத் தீப்கேயின் திருமணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அபிஜீத் தீப்கே தாயார் "எல்லா பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். முன்னதாகவே, அவனிடம் திருமணம் குறித்து கேட்டேன். ஆனால், இது முற்றிலும் அவனுடைய முடிவு" எனக் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேலையில்லா இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சனம் செய்திருந்தார். இதனால் அபிஜீத் தீப்கே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தார். மத்திய கல்வி அமைச்சராக இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்.
கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இது இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பாக கிளம்பியது. பின்னர், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டது.
தற்போது இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு எதிராக போராட்டத்தின்போது போடப்பட்ட FIR-களை திரும்பப் பெற கோரிக்கை வைத்தது. ஆனால், உச்சநீதிமன்றம் கிரிமினல் பின்பலம் கொண்டவர்களை மட்டும் விடுவிக்க மறுத்துவிட்டது.