டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சிஜேபி அறிவிப்பு

மத்திய அமைச்சர்களான ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர்களுடன் சிஜேபி-யினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
NEET protest ends as Centre assures withdrawal of cases after third round of talks
Published on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு முடிவு எட்டப்பட்டால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மறும் ஜிதேந்திர சிங் ஆகியோர்களுடன் காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு:

பேச்சுவார்த்தைக்கு பின்பு மத்திய அமைச்சர்களும், காக்ரோச் ஜனதா கட்சியினரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அந்த செய்தியாளர் சந்திப்பில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்து வந்த போராட்டத்தை முடித்து கொள்வதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மத்திய அரசுடன் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்.

இதையடுத்து நான்கு வார காலத்திற்குள் மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

இவ்வாறு சிஜேபி-யினர் தெரிவித்தனர்.

ஜே.பி. நட்டா பதில்:

நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமா என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், “நீட் வினாத்தாள் கசிவான சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து, இன்னும் முடிவு எட்டப்படவில்லை” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com