நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட்.. நிறுத்தாமல் சென்ற கார் மீது தொங்கியபடி பயணித்த டிராபிக் போலீஸ் - வீடியோ

SUV காரை 2 டிராஃபிக் காவலர்கள் நிறுத்த முயன்றுள்ளனர்.ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் காவலர்கள் இருவரும் சாலையில் இழுத்துச்செல்லப்பட்டனர்.
நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட்.. நிறுத்தாமல் சென்ற கார் மீது தொங்கியபடி பயணித்த டிராபிக் போலீஸ் - வீடியோ
Published on

தலைநகர் டெல்லியில் கார் பான்ட்டை பிடித்து தொங்கியபடி 2 போக்குவரத்து காவலர்கள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதி சாலையில் வந்த SUV காரை 2 டிராபிக் காவலர்கள் நிறுத்த முயன்றுள்ளனர்.

ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்ற நிலையில் அதை நிறுத்த இரண்டு காவலர்களும் காரின் பான்ட்டை பிடித்துள்ளனர். ஆனால் அப்போதும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் காவலர்கள் இருவரும் சாலையில் இழுத்துச்செல்லப்பட்டனர்.

மேலும் காரின் வேகம் கூடிய நிலையில் அவர்கள் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com