அதிகாரிகளுக்காக காத்திருந்து சலிப்பு: முதலையை தானாகவே பிடித்த தைரியமான பெண்..!

வனத்துறை அதிகாரிகளுக்காக காத்திருந்து சலிப்படைந்த மத்திய பிரதேச பெண், தானே முதலையை பிடித்து ஒப்படைத்துள்ளார்.
முதலையைப் பிடித்த பெண்
முதலையைப் பிடித்த பெண்
Published on: 

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் வீட்டின் அருகில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் முதலை ஒன்று நடமாடுவதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணும் அதை உறுதிப்படுத்தினார்.

கணவருடன் இணைந்து முதலையை பிடித்த பெண்

இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் வந்தபாடில்லை. இதனால் அந்த பெண், தானே முதலையை பிடிக்க முடிவு செய்தார். இதனால் தனது கணவருடன் இணைந்து குளத்தில் வலையை கட்டினார். இந்த வலையில் முதலை மாட்டிக் கொண்டது. 4 அடி நீளமுள்ள முதலையின் வாய் மற்றும் கால்களை கட்டி கையில் தூக்கிக் கொண்டு வந்தார்.

பின்னர் ஒரு வழியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் முதலையை ஒப்படைத்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, தானே களத்தில் இறங்க முடிவு செய்தார். தனது நிலத்தில் இருந்த குளத்தில் நான்கு அடி நீளமுள்ள முதலை ஒன்று பதுங்கியிருந்த நிலையில், மீட்புக் குழுவினர் யாரும் வராததால், அவர் ஒரு பொறி வைத்து முதலையைப் பிடித்தார். பின்னர், அந்த முதலையைத் தனது கைகளில் ஏந்திக்கொண்டு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

வனத்துறை காட்டும் மெத்தனம்

இந்த சம்பவம், வனவிலங்குகளை மீட்பது தொடர்பான அழைப்புகளுக்கு வனத்துறை காட்டும் மெத்தனமான அணுகுமுறை குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்ப வழிவகுத்தது. வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தும் அவர்கள் மீட்புக் குழுவை அனுப்ப தவறியதால், தாங்களே இந்த ஆபத்தான செயலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

பயிற்சி பெறாத நபர்கள் வனவிலங்குகளைப் பிடிக்க முயற்சிப்பதில் உள்ள ஆபத்துகளையும் இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. தொழில்முறை உதவி இன்றி முதலையை பிடிக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. இத்தகைய மீட்பு பணிகளை பயிற்சி பெற்ற குழுக்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

X