5 நாள் வேலை கோரி 3 நாள் தேசிய வங்கி வேலைநிறுத்தம், சேவைகள் முடங்கும் அபாயம் எச்சரிக்கை!

ஏடிஎம்கள் செயல்படாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
Bank Strike
Published on
Summary

அனைத்து வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் 3 நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.

வங்கிகளுக்கு 5 நாட்கள் வேலை நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ட்ரைக் நடைபெறுகிறது.

தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் மற்றும் பழைய தனியார் வங்கி ஊழியர்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.

வங்கி சேவை முடக்கம்

இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம் ஊழியர்கள், மற்றும் மேலாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த வேலை நிறுத்தம் தொடங்குகின்ற திங்கட்கிழமைக்கு முன்னதாக உள்ள சனி மற்றும் ஞாயிறு (26 மற்றும் 27-ந்தேதி) வங்கிகளுக்கு விடுமுறையாகும். அதனால் 5 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.

ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்க கூடம். ஏடிஎம்கள் செயல்படாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகிறது.

வேலை நிறுத்தம்

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி. எச். வெங்கடாஜலம் கூறியதாவது:-

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. கடந்த வாரம் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் பிறகு 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று பிரதம தொழிலாளர் நல ஆணையர் நிரஞ்சன் குமார் தலைமையில் 7 வங்கி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் 28-ந் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்.

5 நாள் வங்கி முடக்கம்

3 நாட்கள் நடைபெறும் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதால் 5 நாட்கள் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com