டெல்லியில் துணிகரம்: ஜெய்ப்பூர் வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நகை அபேஸ்

சாப்பிடுவதற்காக பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
கார் கண்ணாடி உடைப்பு
கார் கண்ணாடி உடைப்பு
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த நகை வியாபாரி கணையா லால். இவர் கடையும் நடத்தி வருகிறார். இவர் மார்க்கெட்டிங் தொடர்பான வேலையாக கடந்த 18-ந்தேதி டெல்லி சென்றுள்ளார்.

தன்னுடைய மகன் மற்றும் ஸ்டாஃப் ஒருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். மூன்று பேரும் நகைகள் அடங்கிய இரண்டு பேக் மற்றும் துணிகள் அடங்கிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு பேக்குகளிலும் தங்கம் மற்றும் டைமண்ட் ஆபரணங்கள் இருந்துள்ளன. அத்துடன் லேப்டாப் மற்றும் ஆதார் கார்டு போன்றவைகளும் இருந்துள்ளன.

கடந்த 19-ந்தேதி வியாபாரம் தொடர்பாக கிரேட்டர் கைலாஷில் உள்ள எம். பிளாக் மார்க்கெட்டில் வியாபாரம் தொடர்பாக பல தொழில் அதிபர்களை சந்தித்துள்ளார்.

பின்னர் கரோல் பாக்கில் உள்ள கனரா வங்கிக்கு எதிராக உள்ள ஆர்யா சமாஜ் சாலையில் உள்ள பார்க்கில் காரை நிறுத்திவிட்டு ஒரு கடையில் சாப்பிட சென்றுள்ளனர்.

கார் கண்ணாடியை உடைத்து நகை திருட்டு

அப்போது, பேக்குகள் மற்றும் சூட்கேசை காரிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வரும்போது, காரின் பின் கண்ணாடி உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது.

இது தொடர்பாக கணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கரவாகனத்தில் வந்து கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com