நாங்க எடுத்த டெஸ்ட்ல நல்லா தான் இருந்துச்சு.. பாட்டில் நீரில் பாக்டீரியா என சொன்ன FSSAIக்கு பிஸ்லெரி பதில்

பல்வேறு மூலங்கள் வழியாக கோலிபார்ம் பாக்டீரியா நீரில் நுழையும்.
பிஸ்லெரி
Published on: 
Summary

கோலிபார்ம் பாக்டீரியா கண்டறியப்பட்டதை அடுத்து பிஸ்லெரி நிறுவனம் தனது தண்ணீர் பாட்டில் தொகுப்பை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

பாட்டில் குடிநீர் மாதிரியில் கோலிபார்ம் பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் தயாரிக்கப்பட்ட தனது தயாரிப்பின் ஒரு தொகுப்பை திரும்பப் பெற்றுள்ளதாக பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கழிவுநீர்க் கசிவுகள் மற்றும் சேதமடைந்த குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்கள் வழியாக கோலிபார்ம் பாக்டீரியா நீரில் நுழையும்.

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள டெலிபாரா கிராமத்தில் அமைந்துள்ள பிஸ்லெரி ஆலையிலிருந்து சேகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீர் மாதிரிகளில் கோலிபார்ம் பாக்டீரியா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 12 அன்று பிஸ்லெரிக்கு அனுப்பிய அறிவிப்பில், FSSAI சோதனை முடிவுகள் குறித்து அதற்குத் தெரிவித்ததோடு, ஜூலை மாதம் தயாரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட தொகுப்பின் விற்பனையை தடை செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

பிஸ்லெரி விளக்கம்

FSSAI நடத்திய சோதனையில் பாக்டீரியா கண்டறியப்பட்டதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. அந்த தொகுப்பை திரும்ப பெறுவதாக நேற்று அறிவித்தது.

இருப்பினும், அதே தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் தாங்கள் நடத்திய சுயாதீன சோதனைகளில் உணவுப் பாதுகாப்புத் தரங்களின் எந்த மீறலும் கண்டறியப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் ரசாயனம்

முன்னதாக, கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையிலிருந்து சேகரிக்கப்பட்ட மற்றொரு மாதிரியில் புற்றுநோய் உண்டாக்கும் பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) கண்டறியப்பட்டதால் அது பாதுகாப்பற்றது என FSSAI யால் அறிவிக்கப்பட்டு அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட சில தினங்களில் இதுவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் பாட்டில் குடிநீரின் தரம் குறித்து FSSAI ஒரு விரிவான ஆய்வை நடத்தி வரும் வேளையில், பிஸ்லெரிக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X