உலகின் மிகவும் குள்ளமான பெண்ணை சந்தித்த கிரேட் காளி

வீடியோவில், இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.7 அடி, 1 அங்குலம் கொண்ட கிரேட் காளி, 2 அடி ¾ அங்குலம் கொண்ட ஜோதி ஆம்கேவை ஒற்றை கையால் தூக்கிய காட்சிகளை பயனர்கள் ரசித்தனர்.
உலகின் மிகவும் குள்ளமான பெண்ணை சந்தித்த கிரேட் காளி
Published on

இந்தியாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி, உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என பெயர் பெற்ற ஜோதி ஆம்கேவை சந்தித்து பேசிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

பஞ்சாபை சேர்ந்த கிரேட் காளி 2006-ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை பெற்று பிரபலம் ஆனவர். தற்போது போட்டிகளில் பங்கேற்பதை குறைத்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி ஆம்கேவை சந்தித்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர். 7 அடி, 1 அங்குலம் கொண்ட கிரேட் காளி, 2 அடி ¾ அங்குலம் கொண்ட ஜோதி ஆம்கேவை ஒற்றை கையால் தூக்கிய காட்சிகளை பயனர்கள் ரசித்தனர்.

வீடியோ முழுவதும் ஜோதி ஆம்கே சிரித்துக் கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கோடிக்கணக்கான பயனர்களின் பார்வையையும், 20 லட்சத்திற்கும் அதிகமானவரின் விருப்பங்களையும் குவித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com