சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்து செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி - தேசிய புலனாய்வு முகமை

செங்கோட்டையில் பயங்கரவாதி நடத்திய தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
Delhi Red Fort terror attack
Published on
Summary

டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு கார் குண்டுவெடிப்பு மூலம் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், வெடிகுண்டுகளை தயாரிக்க சிறுநீரில் இருந்து யூரியாவை பயன்படுத்தி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

செங்கோட்டையில் 2025 நவம்பர் 10 அன்று பயங்கரவாதி உமர் உன் நபி கார் குண்டுவெடிப்பை நடத்தினான். இந்த பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இதையடுத்து இந்த தாக்குதல் நடந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

பயங்கரவாதி உமர் உன் நபி, தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை சுமார் 11 நாட்களாக நூஹ் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பயங்கரவாதியின் முதல் இலக்கு லால் மந்திர் ஆக இருந்ததாக தெரிகிறது, அவர் மாலை 6:37 மணியளவில் சுன்ஹாரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வெளியே நடந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து அவர் தனது காரை ஓட்டி சென்று லால் மந்திர் அருகே நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கடைசி நிமிடத்தில் திட்டம் மாற்றப்பட்டு செங்கோட்டைக்கு சென்றுள்ளார்.

கடைசி நேரத்தில் திட்டம் மாற்றம்

டெல்லி செங்கோட்டையை சென்றடைந்த சில நிமிடங்களுக்கு பிறகு, மாலை 6:50 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

2023 முதல் 2025-ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் பயங்கரவாதி, 12 முறை செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அவரது கடைசி பயணம் குண்டுவெடிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்பு, மே 1 அன்று நிகழ்ந்தது.

இதுபோன்ற பயணங்களின் போது பயங்கரவாதியும், அவரது நண்பர்களும் தங்களது கைபேசிகளை அணைத்து விடுவார்கள். இது அவர்களின் டிஜிட்டல் நடமாட்ட பதிவுகளை மறைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

யூரியா நைட்ரேட் மூலம் வெடிபொருட்கள்

பயங்கரவாதிக்கு சொந்தமான பென் டிரைவ்களில் உள்ள தரவுகள், யூரியா நைட்ரேட்டை பயன்படுத்தி வெடிபொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து சேமிக்கப்பட்டு இருந்தது.

மேலும் சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்தெடுப்பதற்கான மாற்று முறையும் அந்த தரவுகளில் இருந்துள்ளது.

பயங்கரவாதி தங்கி இருந்த அறையில் துர்நாற்றம் வீசக் காரணமாக இருந்த, சிறுநீர் நிரம்பிய ஒரு பாலித்தீன் பையை கண்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதி நடத்திய தாக்குதல் குறித்து, தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com