மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

ராஜேஷ் குமார் சிங், 2024 நவம்பர் 1 அன்று பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
ராஜேஷ் குமார் சிங்
Published on: 
Summary

மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கின் பதவிக்காலம் 2026 அக்டோபர் 31 அன்று முடிவடைய இருந்தது.

நீட்டிப்பு

இந்நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், அவர் அக்டோபர் 31, 2027 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை, இவற்றில் எது முந்தையதோ அதுவரை அப்பதவியில் நீடிப்பார்.

ராணுவ செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது, பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை அதிகரிப்பது மற்றும் முக்கிய கொள்கைகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வருவதால், இந்த நீட்டிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ராஜேஷ் குமார் சிங்

கேரள கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் குமார் சிங், 2024 நவம்பர் 1 அன்று பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

அதற்கு முன்பு, அப்பதவியில் இருந்த கிரிதர் பாலாய்ஸ், 2024 அக்டோபர் 31 அன்று ஓய்வு பெற்றார்.

முன்னதாக, ஏப்ரல் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை, சிங் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

மத்திய அரசில், அவர் இதற்கு முன்னர் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளராகவும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பணிகள் மற்றும் நகர்ப்புற போக்குவரத்துத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இது தவிர, கேரள அரசாங்கத்தில் நகர வளர்ச்சிச் செயலாளராகவும், நிதிச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com