அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தெலுங்கானா பெண் பலி

உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
சுப்ரியா
சுப்ரியா
Published on: 
Summary

உணவகத்தை மூடிவிட்டு, சுப்ரியா தனது தோழியுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்ரியா உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், எதுலபுரத்தை சேர்ந்தவர் தரம் சீனிவாச ராவ். இவரது மகள் சுப்ரியா (வயது 31). இவர் கடந்த 2022-ல் மகபூபாபாத் நகரைச் சேர்ந்த கொடுமுரி ரஞ்சித் என்பவரை மணந்தார். ரஞ்சித் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிகிறார். கணவருடன் வசித்து வந்த சுப்ரியா அங்கு ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.

விபத்து

அவர்களுக்கு சாய் அத்வைத் என்ற 3 வயது மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு உணவகத்தை மூடிவிட்டு, சுப்ரியா தனது தோழியுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​பின்னால் வந்த ஒரு லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்ரியா உயிரிழந்தார். அவரது தோழி படுகாயம் அடைந்தார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com