27 முறை கத்திக்குத்து.. பணத்துக்காக பள்ளித் தலைமை ஆசிரியை கொலை - 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது

கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கோவா சென்று வந்த மாணவன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளான்.
தெலுங்கானா
தெலுங்கானா
Published on

தெலுங்கானாவில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் காசுக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரூபா ரெட்டி.

கடந்த ஆகஸ்ட் 11 அன்று அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணை

உடலைக் கைப்பற்றி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 தனிப்படைள் அமைத்து விசாரணையை செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலையை செய்தது அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் என கண்டுபிடித்துள்ளனர்.

சிக்கியது எப்படி?

ரூபா ரெட்டி கொல்லப்படுவதற்கு முன்பு தனது அத்தையிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் யாரையோ பார்த்து 'பாபு' என்று அழைத்துள்ளார்.

அவர் பள்ளியில் மாணவர்களை அழைப்பதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் சொல் இது என்பதை அறிந்த போலிசார், கொலை நடந்த காலகட்டத்தில் பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது கவனத்தைத் திருப்பினர்.

சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது, பள்ளிக்கு வராத 13 மாணவர்களைப் போலிசார் கண்டறிந்து விசாரணை நடத்தினர்.

அந்த 13 பேரில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கையில் அதிக அளவில் பணத்தை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வந்தது போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ரத்தக் கறை ரூபாய்

போலிசார் நடத்திய சோதனையில், ஒரு சிறுவனிடமிருந்து ரத்தக் கறை படிந்த ரூ. 1.54 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தடம் அறிவியல் சோதனையில் ரூபாய் நோட்டுகளில் ரூபா ரெட்டியின் ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலுக்கும் 70 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அவர்களே கொலையை செய்தது உறுதியான நிலையில் அவர்களை போலீசார் கைது செய்த்தனர்.

காரணம்

கைதான மாணவர்களில் ஒருவன் முன்பு பள்ளி விடுதியில் தங்கிப் படித்துள்ளான்.

மதுப் பழக்கம், மோட்டார் சைக்கிள்கள் மீது மோகம் கொண்ட அவனது பையில் இருந்து கைபேசி மற்றும் பணத்தை ரூபா ரெட்டி கைப்பற்றியுள்ளார்.

அவனைக் கண்டித்ததோடு, விடுதியிலிருந்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இது அந்த மாணவனுக்கு அவர் மீது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கோவா சென்று வந்த அந்த மாணவன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளான்.

பள்ளிக் கட்டண பணம் ரூபா ரெட்டியின் வீட்டில் தான் இருக்கும் என்பதை அறிந்து, கொலை நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டை நோட்டம் பார்த்துள்ளான். கொலைக்கு தன் நண்பனையும் கூட்டு சேர்த்துள்ளான்.

கொலை

ஆகஸ்ட் 11 அன்று, ரூபா ரெட்டி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், முகமூடி அணிந்த இரு சிறுவர்களும் சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலின் போது ஒருவனின் முகமூடி விலகியதால், ரூபா ரெட்டி அவனைக் அடையாளம் கண்டுகொண்டார்.

மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அந்தச் சிறுவர்கள் ரூபா ரெட்டியை கத்தியால் 27 முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த ரூ. 1.54 லட்சம் பணம், ஒரு ஐபோன் மற்றும் ரூபா ரெட்டியின் கைபேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.

கொலையாளிகள் இருவரும் சிறுவர்கள் என்பதால், போலிசார் அவர்களைச் சிறுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com