இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு- அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு- அவசரமாக தரையிறக்கம்
Published on

டெல்லி:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது.

இந்நிலையில் டெல்லி அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com