அமெரிக்காவை முடக்கிய தொழில்நுட்ப குளறுபடிகள்.. தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குநர் பதவிநீக்கம்

அரசு துறைகளில் சைபர் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் உத்திகளை மேற்பார்வையிடுவதே கேன்கிராஸின் முக்கியப் பொறுப்பாக இருந்தது.
டிரம்ப் உடன் ஷான் கேன்கிராஸ்
Published on: 
Summary

அமெரிக்க தேசிய பாதுகாப்பு இயக்குநர் பதவிநீக்கம் செய்யபட்டார்.

அமெரிக்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட பல தொழில்நுட்ப சிக்கல்களை தொடர்ந்து தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குநர் ஷான் கேன்கிராஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் முழுவதும் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் அமெரிக்காவை வாட்டி வதைத்தன. மைக்ரோசாப்ட் சேவைகளில் பல இடையூறுகள் ஏற்பட்டன.

அதேபோல வங்கிகளின் சேவைகளும், விமான சேவைகளும் கடும் பாதிப்பை சந்தித்தன.

இறுதியாக, மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) வலையமைப்பிலும் தற்காலிக சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தத் தொடர் தோல்விகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

டிரம்ப் சம்மதம்

இந்த நிகழ்வுகளின் காரணமாகவே கேன்கிராஸ் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக வெள்ளை மாளிகைப் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

"ஷான் கேன்கிராஸை நீக்குவதற்கு அதிபர் டிரம்ப் தனது முழு சம்மதமும் அளித்துள்ளார்" என்று அவர் கூறினார்.

தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குநர்

அரசு துறைகளில் சைபர் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் உத்திகளை மேற்பார்வையிடுவதே கேன்கிராஸின் முக்கியப் பொறுப்பாக இருந்தது.

அவருக்குப் பதிலாக, பாதுகாப்பு துறையின் தலைமைத் தகவல் அதிகாரி (CIO) கிர்ஸ்டன் டேவிஸ் இடைக்கால அடிப்படையில் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

தனது பணிநீக்கம் குறித்து கேன்கிராஸ் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

X