தேநீர் என்பது அசாமின் ஆன்மா..!- புகைப்படங்கள் பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று அங்கு பணிபுரியும் பெண்களுடன் உரையாடினேன்.
தேநீர் என்பது அசாமின் ஆன்மா..!- புகைப்படங்கள் பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Published on

தேநீர் என்பது அசாமின் ஆன்மா அன பெண் தொழிலாளர்களுடன் தேயிலை பறித்த புகைப்படத்தை பகிர்ந்து பிரதமர்மோடி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தேயிலைதான் அசாமின் ஆன்மா! இங்கிருந்து வரும் தேயிலை உலகம் முழுவதும் சென்றடைகிறது.

இன்று காலை திப்ருகாரில், நான் ஒரு தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று அங்கு பணிபுரியும் பெண்களுடன் உரையாடினேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

ஒவ்வொரு தேயிலைத் தோட்டக் குடும்பத்தின் முயற்சிகளையும் கண்டு மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அசாமின் பெருமையை உயர்த்தியுள்ளன.

தேயிலைகளைப் பறித்ததைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசினார்கள், கூடவே ஒரு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்கள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com