நீ தூங்கு தெய்வமே: கோவில் பிரசாதத்தில் மயக்க மருந்து.. காரை அபேஸ் செய்த பலே ஆசாமி

கோவிலில் வாங்கிய பிரசாதத்தை ஓட்டுனருக்கு பயணி கொடுத்துள்ளார். பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு காரை எடுத்தபோது வழியிலேயே ஓட்டுநர் மயங்கியுள்ளார்.
நீ தூங்கு தெய்வமே: கோவில் பிரசாதத்தில் மயக்க மருந்து.. காரை அபேஸ் செய்த பலே ஆசாமி
Published on

மத்தியப் பிரதேசத்தில் டாக்சி ஓட்டுநருக்கு மயக்க மருந்து கலந்த கோவில் பிரசாதம் கொடுத்து பயணி ஒருவர் காரை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்ரா பேருந்து நிலையத்தில் டாக்சி ஓட்டுநரை அணிகிய நபர், அவரது உறவினருக்கு விபத்து ஏற்பட்டதாகவும் ஜான்சி நகருக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஓட்டுநர் 1800 ரூபாய் பணம் வேண்டும் என்று கூற அவரும் ஒப்புக்கொண்டு காரில் எறியுள்ளார்.

செல்லும் வழியில், தாதியாவில் உள்ள புகழ்பெற்ற பீதாம்பர மாயி கோயிலில் நிறுத்த முடியுமா என்று பயணி கேட்க, ஓட்டுநரும் அங்கு காரை நிறுத்தியுள்ளார். அப்போது கோவிலில் வாங்கிய பிரசாதத்தை ஓட்டுனருக்கு பயணி கொடுத்துள்ளார். அந்த பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு காரை எடுத்தபோது வழியிலேயே ஓட்டுநர் மயங்கியுள்ளார்.

அவர் கண்விழித்து பார்த்தபோது காரில் இல்லை. சாலையில் படுத்திருந்தார். சுயநினைவு இல்லாமல் சாலையில் படுத்திருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சுயநினைவுக்கு வந்த ஓட்டுநர், தனது கார், மொபைல் போன், பணம் உள்ளிட்டவை காணாமல் போனதை அறிந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். காரை திருடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com