ஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் நடனமாடிய இளம்பெண்- வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாலிபர்கள்

மெட்ரோ ரெயிலுக்குள் சென்ற இளம்பெண் அங்கும் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு ஓடும் ரெயிலில் நடனம் ஆடினார். இளம்பெண் நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வாலிபர்கள் பதிவிட்டதால் வைரலாக பரவியது.
ஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் நடனமாடிய இளம்பெண்- வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாலிபர்கள்
Published on

திருப்பதி:

ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்களை யாராவது ஒரு வகையில் பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவரது பார்வையும் தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக நூதன முறையில் ஏதாவது செய்து வருகின்றனர். ஒரு சிலர் செய்யும் முறையில் விபரீதம் ஏற்பட்டு உயிரையும் இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐதராபாத் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு நேற்று சில இளம்பெண்கள் வந்தனர். அவர்களில் ஒரு இளம்பெண் தன் உடலில் இருந்த சட்டையை கழற்றி விட்டு டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் உடன் நண்பர்களின் செல்போனில் சினிமா பாடல் ஒலிக்க நடனம் ஆடினார். இளம்பெண் நடனம் ஆடுவதை ஏராளமான வாலிபர்கள் ரசித்தபடி தங்களது செல்போனில் பதிவு செய்தனர்.

இதேபோல் மெட்ரோ ரெயிலுக்குள் சென்ற இளம்பெண் அங்கும் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு ஓடும் ரெயிலில் நடனம் ஆடினார். இளம்பெண் நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வாலிபர்கள் பதிவிட்டதால் வைரலாக பரவியது.

இதனை கண்ட மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் ரெயில் பயணிப்பதற்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருகின்றனர். அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இது போன்று நடனமாடும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

ரெயில் நிலையத்தில் நடமாடிய இளம்பெண் யார் என கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com