பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதாரணி எம்.எல்.ஏ.

கடந்த சில நாட்களாக டெல்லியிலேயே தங்கி உள்ளார். சட்டசபை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.விஜயதாரணி விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று இருக்கிறார்.
பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதாரணி எம்.எல்.ஏ.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார்.

சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

கடந்த சில நாட்களாக டெல்லியிலேயே தங்கி உள்ளார். சட்டசபை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com