search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு பெண் ஊழியரை ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்து வந்த காவலாளி- ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
    X

    அரசு பெண் ஊழியரை ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்து வந்த காவலாளி- ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

    • கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.
    • அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருடைய கணவர் ஐதராபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்தபோது உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவிக்கு அதே அலுவலகத்தில் வேலை கிடைத்தது. பெண்ணுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கம்மம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் சென்றார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த சாமி என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து அவரது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டார். மேலும் பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.

    அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    மறுநாள் தான் செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை பதிவிட்டு விடுவதாக மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கம்மத்தில் இருந்து பெண் ஐதராபாத் வந்து இருந்தார். அப்போது பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட சாமி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ள வீடியோவை அழிக்க வேண்டும் என்றால் கணவர் இறந்ததால் அவருக்கு வந்த ரூ.50 லட்சத்தை தர வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோவை அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டினார்.

    சாமி தன்னைத்தொடர்ந்து மிரட்டி வந்ததால் விரத்தி அடைந்த பெண் இதுகுறித்து ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×