முன்விரோதத்தால் நண்பனை கடத்தி கொலை செய்த 13 வயது சிறுவன் கைது

பழிக்குப்பழி தீர்க்க நினைத்த 13 வயது சிறுவன், 8 வயது சிறுவனை கடத்தி காட்டிற்கு சென்று கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
கொலை
கொலை
Published on

அப்போது,  சோஹாதி கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் சடலமாக கிடந்த சிறுவனை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

அதில், உயிரிழந்த 8 வயது சிறுவனுக்கும் அவனது நண்பனான 13 வயது சிறுவனுக்கும், கடந்த வாரத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாயின் பணம், சில பொருட்கள் காணாமல் போனதற்கு 13 வயது சிறுவனே காரணம் என்று 8 வயது சிறுவன் குற்றம்சாட்டியதாக தெரிகிறது.

இதனால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பழிக்குப்பழி தீர்க்க நினைத்த 13 வயது சிறுவன், 8 வயது சிறுவனை கடத்தி காட்டிற்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com