மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வீடு
வீடு
Published on

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடுத்தர மக்களின் வீட்டு வசதி திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2022-2023-ம் நிதியாண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com