இந்திய பணக்காரர்களில் ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் கவுதம் அதானி முதலிடம்

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.
இந்திய பணக்காரர்களில் ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் கவுதம் அதானி முதலிடம்
Published on

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பற்றிய விவரங்களை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதானி குரூப் நிறுவன தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக திகழ்வது தெரிய வந்துள்ளது.

அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாயாகும். இதன் மூலம் அவர் உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு 5 சதவீத இழப்பை சந்தித்ததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.

இவர்களை தொடர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ், ஜின்டால் குரூப் நிறுவனத்தின் சாவித்ரி ஜின்டால், ஆனந்த் மகேந்திரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com