டெல்லியில் கொசு விரட்டி சுருளால் தீ விபத்து- ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி

கொசு விரட்டி சுருள் திடீரென மெத்தை மீது விழுந்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது. இதனால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.தீ விபத்து ஏற்பட்டது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
டெல்லியில் கொசு விரட்டி சுருளால் தீ விபத்து- ஒரே குடும்பத்தில்  6 பேர் பலி
Published on

புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லி சாஸ்திரி பார்க் பகுதி மசார்லாலா ரோட்டில் உள்ள வீட்டில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர்.

டெல்லியில் தற்போது கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் அவர்கள் வீட்டுக்குள் கொசு விரட்டி சுருளை கொளுத்தி வைத்து இருந்தனர். இதில் இருந்து அதிக அளவு புகை வந்தது. அந்த புகையுடன் கார்பன் மோனாக்சைடு வெளியானதால் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை பாதித்தது. அப்போது கொசு விரட்டி சுருள் திடீரென மெத்தை மீது விழுந்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது. இதனால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

ஏற்கனவே கொசு விரட்டி சுருளில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்தாலும், தீயால் வீட்டை தீ சூழ்ந்ததாலும் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை. இதில் சிக்கி கொண்ட ஒரு குழந்தை, பெண் உள்பட 6 பேர் இறந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அப்போது தான் வீட்டுக்குள் 6 பேர் பிணமாக கிடப்பது தெரிந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 15 வயது சிறுமி உள்பட 2 பேர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com