பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

பெங்களூரு:

பெங்களூரு சம்பங்கி ராமநகரில் நட்சத்திர ஓட்டலான ஐபிஸ் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் நேற்று இரவு வந்தது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு, வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டல் வளாகத்தை ஆய்வு செய்தனர். வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com