ஐஸ்கிரீம் விற்பனையாளரின் படத்தை வரைந்து பரிசளித்த ஓவியர்

இணையத்தில் வைரலாக பரவும் சில வீடியோக்கள் தவறவிட முடியாத அளவுக்கு விலை மதிப்பானதாக மாறி விடும். படத்தை வரைந்த பிறகு சோஹன் அந்த படத்தை ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு பரிசாக அளித்தார்.
ஐஸ்கிரீம் விற்பனையாளரின் படத்தை வரைந்து பரிசளித்த ஓவியர்
Published on

இணையத்தில் வைரலாக பரவும் சில வீடியோக்கள் தவறவிட முடியாத அளவுக்கு விலை மதிப்பானதாக மாறி விடும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் சோஹன் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் அவர் ஒரு ஐஸ்கிரீம் கடைக்குள் செல்கிறார். அங்கு கவுன்டருக்கு பின்னால் நிற்கும் விற்பனையாளர் ஒருவரை பார்த்து அவரின் உருவப்படத்தை வரைகிறார்.

படத்தை வரைந்த பிறகு சோஹன் அந்த படத்தை ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு பரிசாக அளித்தார். தனது படத்தை பார்த்த ஐஸ்கிரீம் விற்பனையாளர் மகிழ்ச்சியில் சிரிக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com