மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

பிரான்ஸ் நாட்டில் இருந்து இதுவரை மொத்தம் 35 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரபேல் விமானங்கள்
ரபேல் விமானங்கள்
Published on

புதுடெல்லி:

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016-ல்  போடப்பட்டது. 

இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏற்கனவே 32 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் 3 விமானங்கள் இந்தியா வந்தடைந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

இதுவரை மொத்தம் 35 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு விமானம் விரைவில் இந்தியா வந்தடையும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com