16 மணி நேரத்திற்குள் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்து கின்னஸ் சாதனை படைத்த வாலிபர்

15 மணி நேரம் 22 நிமிடம், 49 வினாடிகளில் அவர் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சான்றிதழுடன் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
16 மணி நேரத்திற்குள் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்து கின்னஸ் சாதனை படைத்த வாலிபர்
Published on

டெல்லியை சேர்ந்தவர் ஷஷாங்க் மனு. இவர் டெல்லி மெட்ரோ நிலையங்களில் அதிகமாக பயணம் செய்ய விருப்பம் கொண்டவர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் சாதனைக்காக குறுகிய நேரத்தில் அதிக மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்து சாதனை படைக்க முயற்சி செய்தார்.

அதன்படி, அதிகாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள புளூ லைன் பாதையில் தனது மெட்ரோ பயணத்தை தொடங்கினார். அன்று இரவு 8.30 மணிக்குள் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்துள்ளார். அதாவது 15 மணி நேரம் 22 நிமிடம், 49 வினாடிகளில் அவர் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சான்றிதழுடன் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com