நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை சந்தித்த அமைச்சர்கள் குழு

மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45க்கு டெல்லி வந்தடைந்தது.
Tamizhans in Delhi airport
Published on
Summary

நேபாளத்தில் இருந்து மீட்டு வரப்பட்ட 21 பேரையும், தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.

இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர். தொடர்ந்து, தமிழர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45க்கு டெல்லி வந்தடைந்தது.

இதனைதொடர்ந்து, நேபாளத்தில் இருந்து மீட்டு வரப்பட்ட 21 பேரிடம், தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர்.

மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com